இலங்கை
பேருந்துகளில் AI கண்காணிப்புக் கருவிகள் ; போக்குவரத்து அமைச்சர் தகவல்
பேருந்துகளில் AI கண்காணிப்புக் கருவிகள் ; போக்குவரத்து அமைச்சர் தகவல்
நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் GPS மற்றும் CCTV கருவிகள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்ப இணைப்புகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அதனூடாக வீதி விபத்துக்களை குறைக்கவும் இந்த இணைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்தெரிவித்துள்ளார்.
அதோடு ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கத்தில் பேருந்தை செலுத்துகிறார்களா, பணியில் ஈடுபடும்போது கைப்பேசி பயன்படுத்துகிறார்களா போன்ற விடயங்களை கண்டறிய இந்த தொழில்நுட்ப அமைப்புகள் உதவும்.
தற்போது ஓட்டுநர்கள் சீரற்ற வீதி நிலைமைகள், பேருந்துகளில் இயந்திரக் கோளாறுகள் மற்றும் போதிய வெளிச்சம் இன்மை போன்ற இடையூறுகளையும் எதிர்கொள்கின்றனர்.
அவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.