சினிமா
மகள் ப்ரீத்தா கல்யாணத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த செயல்!!
மகள் ப்ரீத்தா கல்யாணத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த செயல்!!
தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான ஐசரி கணேஷ், தற்போது பல படங்களை தயாரித்து வருகிறார்.சமீபத்தில் அவரது மகள் ப்ரீத்தா கணேஷ் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ப்ரீத்தா திருமணத்திற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் மாலத்தீவில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார். இந்நிலையில் மகளின் திருமணத்தை முன்னிட்டு 1500 ஆதரவற்ற, முதியோ, ஊனமுற்றோருக்கு விருந்தினை வழங்கியிருக்கிறார் ஐசரி கணேஷ்.பல கோடி செலவில் மகள் திருமணத்தை முடித்த ஐசரி கணேஷின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.