இலங்கை
மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி
மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் துயர சம்பவம் நேற்று (14 ) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
இறந்தவர் வயலில் நெல் விதைக்கும் போது மின்னல் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.