இலங்கை

யாழில் பிரபல பாடசாலையில் மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

Published

on

யாழில் பிரபல பாடசாலையில் மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

   யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக  தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் , ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை அதிபர் கூறியதாக தெரியவருகின்றது.

Advertisement

அதோடு மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version