இலங்கை

ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது தமிழர் நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; நாமலுக்கு பதிலடி கொடுத்த பிரம்டன் மேயர்

Published

on

ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது தமிழர் நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; நாமலுக்கு பதிலடி கொடுத்த பிரம்டன் மேயர்

  கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (patrick brown) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (patrick brown) சமூக ஊடக பதிவில்,

Advertisement

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.

   ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் பிரம்டன் மேயர் (patrick brown) இடித்துரைத்துள்ளார்.

Advertisement

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும் பிரம்டன் மேயர்  (patrick brown) தனது பதிவில் நாமல் ராஜபக்க்ஷவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version