இலங்கை
வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!
வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!
குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அதிகாரிகள் மீது நடத்தியதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், தற்போதும் சேவையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.