இலங்கை
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை
விஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம் வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. இதன் அடிப்படையில் பார்த்தால் இன்று வைகாசி 1. வியாழக்கிழமையோடு இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் சேர்ந்து வந்திருப்பது சிறப்பு.
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் பாவ கணக்குகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாவக்கணக்கு குறையும் பட்சத்தில் புண்ணியம் தானாக சேர துவங்கிவிடும்.
இன்று 15-05-2025 வைகாசி 1ஆம் திகதி விஷ்ணுபதி புண்ணிய காலம். இன்று இரவு 1:30 மணியிலிருந்து காலை 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது. ஆனால் நடு இரவில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள முடியாது.
கோவில்கள் சாத்தப்பட்டு இருக்கும்.
ஆகவே இன்றைய தினம் காலை 5:00 மணியிலிருந்து 10:00 மணிக்கு முன்பாக விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை பெருமாள் கோவிலில் செய்யலாம். கொடிமரம் இருக்கும் பெருமாள் கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
கொடிமரத்தோடு சேர்த்து பெருமாளை வளம் வரும்போதுதான், நமக்கு முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது 27 உதிரி பூக்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பெருமாளை 27 முறை வலம் வரும்போது கணக்கு வைத்துக் கொள்வதற்காகத்தான் இந்த பூ. எந்த நிறத்தில் இருக்கும் பூக்களை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பெருமாள் கோவிலை வலம் வரும்போது விஷ்ணு பகவானின் மந்திரங்களை தான் உங்களுடைய வாய் உச்சரிக்க வேண்டும்.
மனது முழுக்க பெருமாள்தான் நிறைந்திருக்க வேண்டும். கணக்கில் மட்டுமே எண்ணங்கள் சிதறக்கூடாது.
ஆகவே, பெருமாள் கோவிலை ஒருமுறை வலம் வந்துவிட்டு, கொடிமரத்திற்கு கீழே ஒரு பூவை வைத்துவிட வேண்டும். ஒவ்வொரு பூவாக வைக்கும் போது 27 சுற்று நிறைவடையும்போது, கையில் இருக்கும் பூ முடிந்திருக்கும். 27 சுற்று நிறைவடைந்து விட்டது என்பது அர்த்தம்.
பெருமாளை 27 முறை சுற்றி வந்து விட்டு, பெருமாளுக்கு துளசி இலைகளை சாற்றி, வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலை வலம் வரும்போது நம்முடைய பாவங்கள் நீங்க என்ன மந்திரம் சொல்லுவது.