இலங்கை
உலகின் அதிக வருமானம் பெரும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம்
உலகின் அதிக வருமானம் பெரும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம்
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்த்துகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
பிரபல Forbes பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.
Forbes பத்திரிகையின் வரலாற்றில், வருடத்திற்கு அதிக வருமானம் பெறும் மூன்றாவது விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்தில் விளையாடுவது மட்டுமல்லாது, பிரபலமான விளம்பர படங்கள் நடித்தல் , தனது உணவகம், மற்றும் தனது உடற்பயிற்சி கூடம் என்பவற்றின் மூலமும் வருமானம் ஈட்டிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.