இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் இருவர் கைது
210 மில்லியன் ரூபா பெறுமதியான 6.700 கிலோகிராம் தங்கத்தை வாகன உதிரிப்பாகங்களுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்திவர முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் வர்த்தகர்களுக்கான ‘ரக்த மாவத்தை’ ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைவர் ஆவார்.
கைதான மற்றைய நபர் கண்டி, ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர்களின் தேவைகளுக்கு ஏற்ப விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருவரும் நேற்று (15) காலை டுபாயிலிருந்து வந்த விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அதன்படி, சந்தேக நபர்கள் இன்று (16) காலை மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை