இலங்கை
குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்
குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்
வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (15) இரவு மேற்படி நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் துங்கம, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து சுமார் 8 வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த மரணம் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது ஒரு கொலையா என்பது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[IQEOR4X]