இலங்கை

கொழும்பு மாநகரை கைப்பற்றுவது உறுதியே! பிமல் தெரிவிப்பு

Published

on

கொழும்பு மாநகரை கைப்பற்றுவது உறுதியே! பிமல் தெரிவிப்பு

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். இது உறுதி என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:
மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். ஆனால், அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் 267 சபைகளிலும் நாம் ஆட்சி அமைப்போம். தேசிய மக்கள் சக்தி வேட்பாளரே கொழும்பு மேயர் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version