இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் – 10 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

Published

on

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் – 10 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர்
ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10
மாணவர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களான மாணவர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த
ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல்
பீடத்தில் இரண்டாம் வருட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.தான் மன அழுத்தம்
காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருந்தார்.

இருப்பினும்,
அவரது உறவினர்களும் நண்பர்களும், பல்கலைக்கழகத்தில் நிலவும் பகிடிவதையை
தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version