பொழுதுபோக்கு
சீரியல் தந்த வாழ்க்கை; 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை; அவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
சீரியல் தந்த வாழ்க்கை; 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை; அவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
சின்னத்திரை சீரியல் தற்போது வெள்ளித்திரையில், புதிய நட்சத்திரங்கள் உருவாக ஒரு முக்கிய பாலமாக இருக்கிறது. சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாகி சீரியல்களில் வாய்ப்பினை பெற்று, வெள்ளித்திரையில், முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலரை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒரு நடிகை 15 வயதில் சொந்தமாக வீடு வாங்கி அசத்தியுள்ளார். தற்போது அவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அவர் யார் தெரியுமா?சின்னத்திரையில் பல குழந்தை நட்சத்திரங்கள் வந்தாலும், சிலரே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில், இந்தியில் ‘யே ஹை மொஹப்பத்தேன்’ என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் இஷிதா பல்லாவின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ருஹானிகா தவான். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த தொடரில், தனது க்யூட் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இந்த தொடர் பல நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதில் ஒருவர் தான் ருஹானிகா.அப்போது வெறும் 4-5 வயது சிறுமியாக இருந்த ருஹானிகாவுக்கும், அவரது திரையில் அம்மாவாக நடித்த திவ்யங்கா திரிபாதிக்கும் இடையேயான பந்தம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2019-ம் ஆண்டு இந்த தொடர் முடிவுக்கு வந்தாலும், ருஹானிகா தொடர்ந்து பல்வேறு திரை மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது 17 வயதாகும் ருஹானிகா, இந்த ஆண்டு தனது 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளதாகவும், தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.மேலும், அவர் ஒரு நடிப்பு பள்ளியில் சேர தீவிரமாக தயாராகி வருவதாகவும், அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்காக படித்து வருவதாகவும் கூறினார். ருஹானிகா தனது இளம் வயதிலேயே ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புதிய வீடு வாங்கியுள்ளதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வெறும் 15 வயது தான். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ருஹானிகா, புதிய வீடு வாங்கியது தனது நீண்ட நாள் கனவு என்றும், இதற்காக கடவுளுக்கும், தனது பெற்றோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.A post shared by Ruhaanika Dhawann (@ruhaanikad)மேலும், வீட்டின் புதுப்பிக்கும் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் புதிய வீட்டில் குடிபுகுந்து விடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சினிமாவிலும் தனது தடத்தைப் பதித்துள்ளார் ருஹானிகா. சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து, சன்னி தியோலுடன் ‘காயல் ஒன்ஸ் அகெய்ன்’ என்ற படத்திலும் நடித்தார்.சமூக வலைத்தளங்களிலும் ருஹானிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர்கின்றனர். தற்போது ருஹானிகாவின் சொத்து மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சிறு வயதிலேயே தனது திறமையாலும், கடின உழைப்பாலும் பல சாதனைகளை படைத்து வரும் ருஹானிகா, வருங்காலத்தில் முன்னணி நட்சத்திரமாக உயர்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.