திரை விமர்சனம்
“டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் மக்களிடம் எடுபட்டதா..? வெளியான திரைவிமர்சனம் இதோ…
“டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் மக்களிடம் எடுபட்டதா..? வெளியான திரைவிமர்சனம் இதோ…
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து தயாரித்திருக்கும், ‘ஷோ பீப்பிள்’ வழங்கும் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மூலம் ரசிகர்களிடம் ஹிட் கொடுத்த இயக்குநர் பிரேம் ஆனந்த் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் சந்தானம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர், பிரசாந்த் ரங்கசாமி எனப் பல நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து கடைசி வரை நெகிழ்ச்சி, காமெடி மற்றும் ஆக்சன் கலந்த படமாகவே காணப்படுகின்றது. சந்தானத்தின் என்ட்ரியை பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளனர். இந்தப் படம், ஒரு காமெடி படமாக இருந்தாலும், அதில் இயக்குநர் சில சஸ்பென்ஸ் சேர்த்திருக்கின்றார். இரண்டாவது பாதியில் வரும் டுவிஸ்ட், பலரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. “இந்த டுவிஸ்ட் தான் படம் முழுக்க ஏன் இப்படி போனது என்று விளக்கும் டாப் பாயின்ட்” என திரையரங்கில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.இந்தப் படத்தின் ஹைலைட்களில் ஒன்று செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இணையும் காட்சிகள். இவர்கள் இருவரும் காமெடி பாணியில் நடிப்பது மிகப் பெரிதான விடயம். செல்வராகவனின் ஸ்டைலும், கௌதம் மேனனின் காமெடியும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது. முதல் நாளே பல இடங்களில் ஹவுஸ் புல் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்பத்தூர், மதுரை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் டிக்கெட் புக்கிங் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. அத்துடன் படம் பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கூறியுள்ளனர்.