இலங்கை

நாட்டில் சிக்கன்குனியா நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Published

on

நாட்டில் சிக்கன்குனியா நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் சிக்கன்குனியா வைரஸ் நோய் பரவல் அதிகரிக்குமென சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் மேல் மாகாணத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் சிக்குன்குன்யா பரவல் குறித்து கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் பிற மாகாணங்களிலும் சிக்கன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

Advertisement

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகள்தான் சிக்கன்குனியாவிற்கான காரணிகளாகும்.
தலைவலி, கண்கள் சிவத்தல், வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்களில் வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை கிக்கன்குனியா நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

தொற்று ஏற்பட்டவர்களுக்கு, மூட்டு வலி, தூக்கமின்மை மற்றும் பிற உடல் அசௌகரியங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.

நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கவும், நோயைத் தடுக்கவும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும் என்று தொற்றுநோயியல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version