இலங்கை

பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்ட உயரதிகாரிகள் ஏழுபேரின் பதவிகள் பறிக்கப்பட்டன!

Published

on

பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்ட உயரதிகாரிகள் ஏழுபேரின் பதவிகள் பறிக்கப்பட்டன!

ஆளுநர் அதிரடி நடவடிக்கை

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதன்படி, வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் பதவிகள் திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றனது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version