சினிமா
வடிவேலு அப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கல!! கேப்டன் விஜயகாந்த் மகன் ஓபன் டாக்..
வடிவேலு அப்படி செய்வாருன்னு எதிர்பார்க்கல!! கேப்டன் விஜயகாந்த் மகன் ஓபன் டாக்..
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்மிக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம் படைத் தலைவன். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையி வரும் 23 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று மே 15 ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சண்முக பாண்டியனின் தாயார் கலந்து கொண்டிருக்கிறார்.மேடையில் பேசிய சண்முக பாண்டியன், எங்கள் அம்மா இல்லை என்றால் நாங்கள் யாருமே இல்லை, அம்மாதான் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய தூண். வெளியே வருபவர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், என் அம்மா குறித்து தவறாக சொல்லலாம், அம்மா குறித்து தவறாக சொல்லலாம், அண்ணா குறித்து தவறாக சொல்லலாம். ஆனால் குடும்பத்திற்குள் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும், கட்சிக்காரர்களுக்கு தெரியும்.அப்பா குறித்து அவதூறான கருத்துக்களை திட்டமிட்டு தான் பரப்பினார்கள். யார் தான் குடிக்கவில்லை? ஆனால் குடிப்பதை அப்பா வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிட்டார். அப்பாவின் கண்கள் எப்போதும் சிகப்பாகத்தான் இருக்கும். குடித்துவிட்டு வந்து நிற்கிறார் என்றெல்லாம் கூறினார்கள். இவையெல்லாம் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அப்பா குறித்து பலரும் கிண்டல் செய்யும்போது அது அவரை பாதித்தத என்று தெரியவில்லை.ஆனால் அதை அவர் எங்களிடத்தில் வெளிக்காட்டியது கிடையாது. டிவியில் வந்தால் கூட சேனலை மாற்றிவிடுவார். அவரகள் அப்படித்தான் பேசுவார்கள், நான் மக்களுக்கு நல்ல செய்ய வந்தேன், நல்லது செய்வேன் என்று கூறுவார்.வடிவேலு சாருக்கு அப்பா, சினிமாவில் உதவி செய்துள்ளார் என்பது உண்மை. அதே நேரத்துல் வடிவேலு சாரும் மிகப்பெரிய திறமைசாலி. அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். ஆனால் அவர் அப்பாவை பற்றி பேசினது தேவையில்லாதது. அப்பாவுக்கு அந்த காலக்கட்டத்தில் வருத்தம் இருந்திருக்கலாம், இரு குறிப்பிட காலத்துக்குப்பின் அப்பா அதனை கண்டுக்கொள்ளவில்லை.அப்பா எப்போதாவது கவலையாக இருந்தால் கூட வடிவேலு காமெடி போட்டுத்தான் பார்ப்பார். என் படத்திலேயே அவரை நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை இருந்தது. அப்பாவும், வடிவேலு சார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் கதாபாத்திர வடிவமைப்பில் இளமையான நபர் தேவைப்பட்டதால் வடிவேலு சாரை நாங்கள் அணுகவில்லை.வடிவேலு சார் அப்பாவை விமர்சித்தப்பின் அப்பா சொன்னது, விட்டுடுங்க, ஏதோ தெரியாம பேசிட்டாருன்னு சொன்னார். அப்பா அப்படி சொன்னப்பின் விட்டுவிடவேண்டும், அதை நோண்டிக்கொண்டு இருக்கக்கூடாது என்று சண்முக பாண்டியன் பேசியுள்ளார்.