இந்தியா

2026 மட்டுமல்ல எதிர்வரும் ஆண்டிலும் தி.மு.க ஆட்சி தான் – ஸ்டாலின் தெரிவிப்பு!

Published

on

2026 மட்டுமல்ல எதிர்வரும் ஆண்டிலும் தி.மு.க ஆட்சி தான் – ஸ்டாலின் தெரிவிப்பு!

2026 மட்டுமல்ல 2031, 2036ஆம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ள நிலையில் அவர் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.

Advertisement

இதன்போது இன்று காலை ஊட்டியில் நடைபயிற்சி செய்த, பின்னர் ஊடகவியளாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்;
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version