இலங்கை
65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி!
65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி!
யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியின் 65 ஆவது அகவை நிறைவை யொட்டி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும், யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரிச் சமூகமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நடைபவனி நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவனி யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரி முன்றலில் ஆரம்பமாகி மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம் பொது நூலகம், ஏ-9 வீதி, முதலாம் குறுக்கு வீதி வழியாக மீண்டும் தாதி யர் பயிற்சிக் கல்லூரியைச் சென்றடைந்தது.