சினிமா
இயற்கையை ரசிக்கும் மிருணாள் தாக்கூர்..! கலக்கல் போட்டோஸ்..
இயற்கையை ரசிக்கும் மிருணாள் தாக்கூர்..! கலக்கல் போட்டோஸ்..
ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் திறமையாக நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான அறிமுகத்தை செய்தார். அந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, மிருணாளுக்கு தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை ஏற்படுத்தியது.அதையடுத்து அவர் நடித்த Hi நானா திரைப்படம் மெகா ஹிட்டாகி அவரது திறமையை மேலும் மெருகூட்டியது. இப்படத்தின் வெற்றியால் மிருணாள் தாகூர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் பெறும் நடிகையாக மாறியுள்ளார். பட வாய்ப்புகள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது Son of Sardaar 2 மற்றும் Dacoit: A Love Story போன்ற முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் இவர் தற்போது இயற்கை அழகை ரசிப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிம்பிளான கறுப்பு நிற உடையில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகிய புகைப்படங்கள் இதோ..