சினிமா

உங்க பசங்க அந்த டிரெஸ் போடலையா!! கெனிஷா ஆடை பற்றி பாடகி சுசித்ராவின் கருத்து..

Published

on

உங்க பசங்க அந்த டிரெஸ் போடலையா!! கெனிஷா ஆடை பற்றி பாடகி சுசித்ராவின் கருத்து..

தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிங் என்றால அது நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த வழக்கு இன்னும் முடியாத நிலையில், காதல் கிசுகிசுவில் சிக்கிய பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்ததிருந்தார் ரவி மோகன். அவரின் இந்த செயலுக்கு ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதற்கு பதிலாக ரவி மோகனும் சரியான விளக்கத்துடன் அறிக்கை வெளியிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட பல பத்திரிக்கையாளர்கள் பேட்டிகளில் இதுகுறித்து பேசி வருகிறார்கள். அந்தவகையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், கெனிஷாவின் ஆடைகள் குறித்து மோசமான விமர்சித்தார்.இதனை கேள்விபட்ட பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். கெனிஷா பிராவும் ஜூன்ஸும் அணிந்துள்ளார் என்று விமர்சித்துக்கொண்டுள்ளீர்களே? உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பிரா அணிவதில்லையா? வீட்டில் உள்ள குழந்தைகள் பிரா அணிவதில்லையா? ஒருவர் வளர்ந்துவிட்டார் என்பதற்காக அவரது ஆடை சுதந்திரத்தை கேள்வி கேட்பது தவறு என்று பதிலளித்துள்ளார்.மேலும் நீங்கள் எல்லோரும் ரவி மோகனின் குழந்தைகள் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த குழந்தைகள் என்ன ஆதரவற்றோ இல்லத்தில் நின்றுக்கொண்டு அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்று அழுதுக்கொண்டா உள்ளார்கள். அந்த குழந்தைகள் பங்களாவில் செம ஜாலியாக அம்மா செல்லம், பாட்டிச்செல்லம், அத்தைச்செல்லம், குஷ்பு செல்லம் என்று இருக்கிறார்கள்.இதற்கு முன் திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றவர்கள் வரலாற்றிலேயே விவாகரத்து செய்தது இல்லையா? ஆர்த்தி மற்றும் ஆர்த்தி தரப்பில் ஏதாவது சொல்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ரவி மோகன் ஐந்து பக்கத்திற்கு கதறுகிறார், ஆனால் ரவி மோகனி நம்பமாட்டேன் என்கிறீர்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version