உலகம்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 146 பேர் பலி

Published

on

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 146 பேர் பலி

ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 

ஆனால், 20 ஆயிரம் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர் என சான்றுகள் எதனையும் வெளியிடாமல் இஸ்ரேல் கூறுகிறது.

இந்த சூழலில், காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் விமான படை புதிதாக நடத்திய தாக்குதலில் 146 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 

Advertisement

ஆனால், உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறும்போது, 459 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.

புதிதாக தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது. 

கடந்த வியாழ கிழமையில் இருந்து கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

Advertisement

டிரம்பும், காசாவில் பசி நெருக்கடி அதிகரித்து வருகிறது. 

நிவாரண உதவிக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது என நேற்று ஒப்பு கொண்டார். காசா முற்றுகையை நிறுத்தும்படியும், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்பும்படியும் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version