இலங்கை
குறைந்துவரும் தங்கம் விலையால் மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
குறைந்துவரும் தங்கம் விலையால் மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
உலக பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணங்களுக்காக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்தார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.
தங்கத்தின் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று (மே 16) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8720க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்று (மே 17) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8720க்கும், ஒரு சவரன் ரூ.69,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீண்ட நாட்களாக சவரனுக்கு ரூ.70,000 கடந்திருந்த தங்கம் விலை, தற்போது சற்று குறைந்திருப்பதால், தங்கம் வாங்க இது சரியான காலமாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7150க்கும், சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.