சினிமா

சரிகமப லிட்டில் சாம்ஸ்!! மொத்தம் 4 சீசன்களின் டைட்டில் வின்னர்கள் இவர்கள் தான்..

Published

on

சரிகமப லிட்டில் சாம்ஸ்!! மொத்தம் 4 சீசன்களின் டைட்டில் வின்னர்கள் இவர்கள் தான்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி என்றால் அது சரிகமப. இந்நிகழ்ச்சியில் லிட்டில் சாம்ஸ் 4 சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. திவினேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது.இந்நிலையில் இதுவரை நடந்து முடித்த சரிகமப 4 சீசன்களின் டைட்டில் வின்னர்கள் மற்றும் முதல் மற்றும் இரண்டு ரன்னர் அப் யார் யார் எவ்வளவு பரிசு பெற்றார்கள் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 1ன் டைட்டில் வின்னராக, விஷ்வா பிரசாத் பிடித்தார். அவருக்கு பரிசு தொகையாக 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக திஷதனா அறிவிக்கப்பட்டு 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. ரக்தஷ் 2வது ரன்னர் அப்-ஆக அறிவிக்கப்பட்டு 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.சரிகமப லிட்டில் சாம்ஸ் 2வது சீசன் டைட்டில் வின்னராக இதழிகா அறிவிக்கப்பட்டு 40 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டிச்சென்றார். அவருக்கு அடுத்து முதல் ரன்னர் அப்-ஆக ஆர்யனந்தா பிடித்து 1 கிலோகிராம் தங்கம் பரிசாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. 2வது ரன்னர் அப்-ஆக பவின் வினோத் மற்றும் சஹானா இருவருக்கும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு பரிசு தொகையாக 3 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக 50 ஆயிரம் ரூபாயை பெற்றார் பிரவஸ்தி.சரிகமப லிட்டில் சாம்ஸ் 3ன் டைட்டில் வின்னராக கில்மிஷா அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக ருத்ரேஷ் குமார் அறிவிக்கப்பட்டு 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2வது ரன்னர் அப்-ஆக சஞ்ஜனா அறிவிக்கப்பட்டு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக ரக்ஷிதா ஜவஹர் அறிவிக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்பட்டது.சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்-ஆக யோகஸ்ரீ அறிவிக்கப்பட்டு வீட்டு மனை பரிசாக வழங்கப்பட்டது. 3வது ரன்னர் அப்-ஆக மலேசியாவை சேர்ந்த ஹேமித்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version