சினிமா
சாதனை மாணவியை நேரடியாக வாழ்த்திய உலகநாயகன்..! – வீடியோவை பார்த்து நெகிழும் ரசிகர்கள்..!
சாதனை மாணவியை நேரடியாக வாழ்த்திய உலகநாயகன்..! – வீடியோவை பார்த்து நெகிழும் ரசிகர்கள்..!
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், பல மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. அந்த மகிழ்ச்சியின் உச்சமாக, ஒட்டுமொத்தமாக 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவி சோஃபியாவின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரத்தை அனைவருமே பாராட்டி வருகின்றனர்.அந்தவகையில் மாணவி சோஃபியாவின் சாதனையை அறிந்த கமல்ஹாசன், உடனடியாக அவரது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு, வீடியோ காலில் உருக்கமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மக்களின் மனதையும் மாணவர்களின் மனவலிமையையும் உருக்கும் வகையில் அமைந்துள்ளது.கமல்ஹாசன் கூறியதாவது, “உங்கள மாதிரி குழந்தைகள் தான் தமிழ்நாட்டுக்கு பெருமை. உன் மேல் எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கு.” என்றார். கமல்ஹாசன் அவரது வீடியோவில் மாணவியை நேரடியாகப் புகழ்ந்ததும், அந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை சொரிந்துள்ளனர்.