சினிமா
” தனுஷ் மட்டும் தான் அப்படி பண்ணல..” பிரபல நடிகை உருக்கம்..
” தனுஷ் மட்டும் தான் அப்படி பண்ணல..” பிரபல நடிகை உருக்கம்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக 13 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை வித்யுலேகா ராமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது உடல் தோற்றம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வாய்ப்பு இழப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 2021-ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு சிலர் தன்னை வெளிநாட்டில் குடியேறியதாகவும் பிசியாக இருப்பதாகவும் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு பரப்பப்பட்ட தகவல்களால் தனது நடிப்பு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் இது மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ” பொதுவாக பல படங்களில் எனது உருவத்தை வைத்து உருவ கேலி செய்யும் காமெடி காட்சிகளை தான் எடுத்தார்கள். சில டைரக்டர்கள் ரொம்ப சென்ச்டிவா இருப்பாங்க. தனுஷ் சார் இயக்கிய ப. பாண்டி படத்தில் மட்டும்தான் அப்படி எந்த ஒரு சீனோ அல்லது வசனமோ எடுக்கவில்லை. நான் அவர்கிட்ட ஏதாவது சொல்லுங்க குண்டா இருக்க, பானை மாதிரி இருக்கன்னு எதாவது சொல்லுங்க என்று சொன்னேன். அதற்கு அவர் நான் எதுக்கு அப்படி எல்லாம் சொல்லணும் என்று சொன்னாரு. சில பேருக்கு அந்த மாதிரி ஒரு மெச்சூரிட்டி இருக்கு” என கூறியுள்ளார்.