இலங்கை

தமிழர் பகுதியில் இளைஞன் செய்த கீழ்த்தரமான செயல் ; பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி

Published

on

தமிழர் பகுதியில் இளைஞன் செய்த கீழ்த்தரமான செயல் ; பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி

பல்வேறு பகுதிகளில் 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார்  தெரிவித்தனர்.

இம் மாதம் வவுனியா, ஈரப்பெரியகுளம், மதவாச்சி, வவுனியா – முதலாம் குறுக்குத் தெரு, மதவாச்சி – அட்டவீரக் கொட, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் பல்சர் ரக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.

Advertisement

குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது சிதம்பரபுர வீதி, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களும் முறையே 550,000, 299,500, 500,000, 300,000, 970,000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து குறித்த 5 பல்சர் மோட்டர் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version