இலங்கை

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

Published

on

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

Advertisement

இதன்படி வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவனி இன்றய தினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சென்றடையவுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version