இலங்கை

தேசிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை இல்லை ; சுனில் வட்டகல

Published

on

தேசிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை இல்லை ; சுனில் வட்டகல

  ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நாம் சிறப்பாகவே இணைந்து பயணித்து வருகின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

கடந்துள்ள 6 மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கிடையில் குழப்பம் ஏற்படும் எனப் பலர் கருதினர்.

அது தொடர்பில் கதைகளைப் பரப்பினார்கள். இன்றளவிலும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் தொடர்கின்றன. இந்தப் பதிவுகளை பார்க்கும்போது சிரிப்புதான் வருகின்றது.

எமது குழுவினர் புரிந்துணர்வுடன் சிறப்பாகச் செயற்பட்டு தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, வீண் விமர்சனங்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version