பொழுதுபோக்கு

மகளை மருத்துவர் ஆக்கிய பிரபல அம்மா நடிகை: பட்டம் வாங்கி பாராட்டு பெற்ற மகள்: வைரல் க்ளிக்!

Published

on

மகளை மருத்துவர் ஆக்கிய பிரபல அம்மா நடிகை: பட்டம் வாங்கி பாராட்டு பெற்ற மகள்: வைரல் க்ளிக்!

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து முன்னணி கேரக்டர் நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். இதில் ஒரு மகள் தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார்.1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பசும்பொன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், இப்போது தமிழ் சினிமாவில், முக்கிய அம்மா நடிகையாக வலம் வருகிறார். அஜித்குமார் தொடங்கி தனுஷ் வரை பல நடிகைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சரண்யா, சமீபத்தல் வெளியான ரவி மோகனின் ப்ரதர் படத்தில் அவரது அத்தையாக நடித்திருந்தார். நடிகர் இயக்குனர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட பொண்வண்ணனை கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். திரைப்படங்களில் பலருக்கும் அம்மாவாக நடித்த சரண்யா ரியல் லைஃபில், ஒரு கண்டிப்பான அம்மாவாக இருக்கிறார்.பொன்வண்ணன் – சரண்யா தம்பதி தங்கள் 2 மகளும் மருத்துவம் படித்துள்ள நிலையில், மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளளையமகள் பொதுநல மருத்துவராகவும் இருக்கின்றனர். மகள்கள் இருவருமே மருத்துவம் படிக்க வேண்டும் என்பது,  நாங்கள் எடுத்த முடிவு தான். நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அப்படி இருக்க கூடாது என்று அப்பா அம்மா இருவருமே சொன்னது இல்லை. நாங்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற எங்களுடன் இருந்தார்கள் என்று சரண்யாவின் மகள்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தனர்.சரண்யா பொன்வண்ணன் இருவருமே சினிமாவில், பிஸியாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கண்டிப்புடன் இருந்துள்ளனர். படிப்பு என்று வரும்போது மார்க் அதிகம் இல்லை என்றால் திட்டு விழும். வீடு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று அம்மா விரும்புவார். அதனால் சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவில்லை என்றால் கூட திட்டு விழும். அம்மா ஷூட்டிங் போனலும் சரி அங்கிருந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் என்று மகள்கள் அந்த பேட்டியில் கூறியிருந்தனர்.இதனிடையே, சரண்யாவின் இளைய மகள் தற்போது சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவன் மனைவி இருவருமே தமிழ் சினிமாவில் பிஸியான நட்சத்திரங்களாக வலம் வந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு சினிமாவில் நிழல் படாமல், அவர்களை வேறு துறையில் முன்னணியில் நிறுத்தியுள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version