சினிமா
மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்!! ஜெயம் ரவி குறித்து ஆர்த்தியின் தாயார் அறிக்கை..
மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்!! ஜெயம் ரவி குறித்து ஆர்த்தியின் தாயார் அறிக்கை..
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிங் என்றால அது நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் காதல் பற்றிய செய்திகள் தான்.மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த வழக்கு இன்னும் முடியாத நிலையில், காதல் கிசுகிசுவில் சிக்கிய பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்ததிருந்தார் ரவி மோகன்.அவரின் இந்த செயலுக்கு ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலாக ரவி மோகனும் சரியான விளக்கத்துடன் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஆர்த்தி அம்மா சுஜாதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில், தன்னை பற்றி வெளியாகும் அவதூறுகள் குறித்தும் ஜெயம் ரவியை வைத்து 3 படங்கள் தயாரிக்க, 100 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியது குறித்தும் அதில் பகிர்ந்துள்ளார். மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என்று ஆர்த்தியின் தாயார் சுஜாதா அந்த அறிக்கையில் விவரித்துள்ளார்.