இலங்கை
மன்னாரின் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
மன்னாரின் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
மன்னாரில் இன்று (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்று காலை 06.00 மணி அளவில் பலத்த காற்று வீசியதுடன் கடும்மழையும் பெய்தது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சீரற்ற காலநிலையால் இன்றைய தினம் காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் மற்றும் கண்ணாடி இழை படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் கரையில் ஒதுக்கப்பட்டது.
இதனால் படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை பலத்த காற்று காரணமாக பேசாலை கடற்கரையில் காணப்பட்ட மீனவர்களின் மீன் வாடிகள் சேதமடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.