இலங்கை

யாழில் அரச முதியோர் இல்லத்தில் இருந்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published

on

யாழில் அரச முதியோர் இல்லத்தில் இருந்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழில் அரச முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 71வயதான வயோதிபப் பெண்ணொருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version