சினிமா
ரவிமோகன் – ஆர்த்தி விவகாரம்..அழுது புலம்பும் மாமியார்..!
ரவிமோகன் – ஆர்த்தி விவகாரம்..அழுது புலம்பும் மாமியார்..!
சமூக வலைத்தளங்களை ஓப்பன் பண்ணினாலே ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இவர்களுடைய சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் பரவி காணப்படுகின்றது. இந்த நிலையில் ஆர்த்தி ரவி தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை சமூக வைத்தளத்தில் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்று புள்ளிவைக்கும் விதமாக ஒரு அறிக்கை ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கை சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.அதாவது நான் சுந்தர்சியை வைத்து “வீராப்பு” திரைப்படத்தினை தயாரித்தேன். அந்த படம் எனக்கு நல்ல வரவேப்பை பெற்று தந்து. இதனை தொடர்ந்து என்னுடைய மாப்பிளை ரவி தன்னை வைத்து திரைப்படத்தினை தயாரிக்க வேண்டும் என்ற ஆலோசனையால் அடுத்து அடுத்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அடங்கமாறு,பூமி மற்றும் சைரன் என அடுத்தது திரைப்படங்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன். அந்த படங்களுக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியில் வெற்றி அளிக்கவில்லை. இந்த திரைப்படத்திற்காக 100 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த பணத்தில் அவருக்கு சேர வேண்டிய சம்பளத்தினை கொடுத்து விடுவேன் என்றும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.இப்போது அந்த படத்திற்காக நான் வேண்டிய கடனை பொறுப்பு ஏற்க சொன்னதாக குற்றம்சாட்டி உள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. பைனான்சியர்கள் நீட்டும் எல்லா பாத்திரத்திலும் கையொப்பமிட்டு கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.அப்படி அவரிடம் நான் பொறுப்பு ஏற்க சொன்னதற்கான ஆதரங்களை காட்டுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் என்னுடைய குடும்பத்துக்காக மட்டும் தான் பொறுமையாக இருந்தாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக வைத்தளத்தில் கூறப்படுவது போல கொடுமைக்கார மாமியார், மகளின் குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய் என பல குற்றங்களை சுமத்தாதீர்கள். நான் ஏற்கனவே எனது மகள் வாழ வெட்டியாக பார்க்கும் துயரத்தில் இருக்கின்றேன். நீங்களும் என்னை மனவேதனைக்கு உள்ளக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.