சினிமா
விருதுக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும்..! பத்மபூஷன் பெற்ற நடிகர் அஜித்தின் உணர்ச்சிகரமான உரை!
விருதுக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும்..! பத்மபூஷன் பெற்ற நடிகர் அஜித்தின் உணர்ச்சிகரமான உரை!
தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை பாணி என்பவற்றில் சிறந்து விளங்கும் நடிகர் அஜித் குமார், இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய குடிமக்கள் விருதான பத்மபூஷன் விருதை சமீபத்தில் பெற்றதற்குப் பிறகு, முதன்முறையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது X தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில், பத்மபூஷன் விருது அவருக்கு பெரும் பொறுப்பையும், வாழ்வில் ஒரு புதிய கட்டத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.தனது பதிவில், நடிகர் அஜித் கூறியிருப்பதாவது, “பத்மபூஷன் விருது பெற்றது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அத்துடன் எனக்கு நிறைய பொறுப்புக்கள் வந்திருக்கிறது. அந்த விருது ஏற்படுத்திக் கொடுத்த கெளரவத்துடன் நான் வாழ வேண்டும். இந்த விஷயம் என்னை கவனத்துடன் செயல் பட வைக்கிறது.” என்றார். மேலும், “இப்போது படங்களிலும் நடிக்கிறேன்; ரேஸிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த விருது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது. சரியான பாதையில் இருக்கிறேன் என நம்பிக்கை அளித்துள்ளது.” எனவும் கூறியுள்ளார் நடிகர் அஜித். அஜித் குமார், பத்மபூஷன் விருதைப் பெற்றதனைத் தொடர்ந்து அந்த விருதுக்கே உரிய ஒரு விதமான பொறுப்புணர்வையும், நேர்மையும் கொண்டிருக்கும் நடிகராக இன்று திகழ்கின்றார். அவரது வார்த்தைகள், இன்று இளம் தலைமுறைக்கு மிக முக்கியமான ஒரு பாடமாக உள்ளதாக சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.