வணிகம்

Gold Rate Today: மாறாத தங்கம் விலை… இஇல்லத்தரசிகளுக்கு ஆறுதல்!

Published

on

Gold Rate Today: மாறாத தங்கம் விலை… இஇல்லத்தரசிகளுக்கு ஆறுதல்!

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதுகடந்த டிசம்பர் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது.கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டி வந்த தங்கம் விலை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9,513-க்கும், ஒரு சவரன் ரூ. 76.104-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version