சினிமா

அஜித்தின் பந்தயக்காரில் திடீரென கசிந்த புகை..! டயர் வெடித்து சிதறி விபத்து…

Published

on

அஜித்தின் பந்தயக்காரில் திடீரென கசிந்த புகை..! டயர் வெடித்து சிதறி விபத்து…

பல கோடி ரசிகர்களை தன்வசமாக்கிய நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “குட் பேட் அக்லி ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேசிங்கிலும் ஈடுபாடு காட்டி வருகின்றார். துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.தற்போது அவர் GT4 European Series கார் பந்தயத்தில் கலந்து கொண்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை பல்வேறு பேச்சுக்களுக்கு இடையில் இருந்த அவரது பந்தயப் பயணம், நேற்று நடைபெற்ற போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அஜித் மூன்றாவது சுற்றை வெறும் ஒரு நிமிடம் 48 விநாடிகளில் கடந்து, தனது பர்சனல் பெஸ்ட் லேப் டைமிங் சாதனையை நிகழ்த்தினார்.இந்த கார் பந்தயம் நடந்துவரும் நிலையில் திடீரென காரில் இருந்து புகை கக்கியுள்ளதுடன் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் அஜித் காரை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் இவருக்கு எதுவித காயமும் இல்லாமல் தப்பியுள்ளார். மேலும் போட்டி முடிவடைவதற்கு ஒரு சில மணி நேரங்கள் மாத்திரம் இருந்தமையால் அஜித் பந்தயத்தில் இருந்து தோல்வியடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version