இலங்கை
கசிப்பு பிடிக்க சென்ற பொலிஸாரை கொட்டிய குளவிகள்
கசிப்பு பிடிக்க சென்ற பொலிஸாரை கொட்டிய குளவிகள்
ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தேயிலைத் தோட்ட மேல் பகுதியில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகில் இரண்டு நபர்களால் கசிப்பு வியாபாரம் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அஙகு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட அதிகாரிகள் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கசிப்பு தயாரித்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.