பொழுதுபோக்கு
கார் சாவியை எடுத்தவர் ரோஹினி; சரியாக கண்டுபிடித்த முத்து; இப்படி மாட்டிக்கிட்டீங்களே!
கார் சாவியை எடுத்தவர் ரோஹினி; சரியாக கண்டுபிடித்த முத்து; இப்படி மாட்டிக்கிட்டீங்களே!
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் அடுத்த வார எபிசோடுகளுககான ப்ரமோ தற்போது வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சீரியலில், 3 ஆண் பிள்ளைகளை பெற்ற அண்ணாமலை விஜயா தம்பதி, அவரது மகன்கள் மருமகள்கள் சுற்றி கதை நடக்கிறது. இதில் மூத்த மகன் மனோஜ் மனைவி ரோஹினி தான் உண்மையான வில்லி. அவர் சொன்ன பொய்யினால் எப்போது மாமியார் விஜயாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில், சமீபத்தில் இவர் பணக்காரர் இல்லை என்ற உண்மை அவரது மாமியாருக்கு தெரிந்து பெரிய பிரச்னை வெடித்தது, ஆனாலும் ரோஹினி இன்னும் சில உண்மைகளை மறைந்துள்ளார்.இதனிடையே கடந்த வார எபிசோட்டில், முத்துவின் கார் சாவியை எடுத்து, சிட்டியிடம் ரோஹினி கொடுக்க, அவன் காரின் பிரேக் ஆயிலை கட் செய்துவிட்டான். இதனால் முத்துவின் கார் பிரேக் பிடிக்காமல், காவல்துறை வாகனத்தில் மோதிவிட, முத்துவின் லைசன்ஸ் பறிக்கப்பட்டு, கான்ஸ்டபிள் வீட்டில் பிரச்னை செய்ததற்காக, கைதும் செய்யப்பட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும், முத்து இதில் இருந்து எப்படி தப்பிப்பான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இதனிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், முத்து தனது லைசன்ஸ் கிடைத்துவிட்டது காரும் கிடைத்துவிட்டது என்று வீட்டில் சொல்கிறான். அதன்பிறகு, காரில் பிரேக் பிடிக்காமல் போனதற்கு காரணம், பிரேக் ஆயில் டியூபை யாரோ கட் செய்திருக்கிறார்கள். கார் சாவி இல்லாமல் இதை செய்ய முடியாது. இந்த வீட்டில் இருக்கும் யாரோ மூலமாகத்தான் கார் சாவி வெளியில் போயிருக்கு என்று சொல்ல, ரோஹினி, மீனா என்ன இவர் நான் தான் சாவியை கொடுத்தேன்னு சொல்றாரா என்று கேட்டு மாட்டிக்கொள்கிறாள்.அதே சமயம் மீனா, அவர் உங்களை சொல்லவில்லையே, என்று சொல்ல, நானே பல பிரச்னையில் இருக்கிறேன். ஆண்டிக்கிட்ட தினமும் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறேன். ஆணியில் மாட்டியிருக்கும் கார் சாவியை நான் எப்படி எடுப்பேன் என்று கேட்க, நான் சாவியை ஆணியில் மாட்டியதாக சொல்லவே இல்லையே என்று முத்து சொல்ல, ரோஹினி முழிக்கிறாள் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.