இலங்கை

குரு பகவானின் பார்வை பட்டு ராஜ வாழ்க்கையை பெறப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

Published

on

குரு பகவானின் பார்வை பட்டு ராஜ வாழ்க்கையை பெறப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

 குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார்.

மிதுனம் புதன் பகவானின் சொந்த வீடாகும். அப்படியாக குரு பகவானின் இந்த மிதுன ராசி பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போகிறது. 

Advertisement

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த சம்பளஉயர்வு, மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமைய போகிறது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடகம்:
கடக ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி மனதில் உள்ள கவலைகள் எல்லாம் விலக செய்கிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளிநாடு சென்று வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக அமைய உள்ளது. குழந்தைகளால் ஆதாயம் உண்டாகும்.

Advertisement


கன்னி:
கன்னி ராசி நேயர்களுக்கு குரு பெயர்ச்சி புது வாழ்வை தேடிக்கொடுக்க போகிறது. மாணவர்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சமுதாயத்தில் நீங்கள் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version