தொழில்நுட்பம்

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை… சூப்பர்செயலியை அறிமுகப்படுத்திய ரயில்வே!

Published

on

டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை… சூப்பர்செயலியை அறிமுகப்படுத்திய ரயில்வே!

இந்திய ரயில்வே சூப்பர் செயலியான ‘SwaRail’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே பயணிகளுக்கு அனைத்து டிஜிட்டல் வசதிகளையும் ஒரே தளத்தில் வழங்குவதை ‘SwaRail’ நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆப் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு முதல் ரயில் நிலை மற்றும் உணவு ஆர்டர் வரை அனைத்து விதமான சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும். இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி, எப்போது, ​​எங்கு பதிவிறக்கம் செய்யலாம், மேலும் இதன் மூலம் என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை முழுமையாக இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.ஸ்வாரெயில் செயலி மூலம் பயணிகளுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்?1. ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் இதில் கிடைக்கும்:2. ரிசர்வ் டிக்கெட் முன்பதிவு3. அன்ரிசர்வ் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு4. PNR நிலை மற்றும் ரயில் நிலையைச் சரிபார்க்கும் வசதி (PNR & ரயில் நிலை விசாரணை)5. பார்சல் & சரக்கு முன்பதிவு6. ரயில்களில் உணவு ஆர்டர் செய்தல்7. ரயில்வே உதவி மற்றும் புகார் மேலாண்மை (ரயில் மடத் – புகார் மேலாண்மை அமைப்பு)SwaRail சூப்பர் ஆப் என்றால் என்ன?’SwaRail’ செயலி இந்திய ரயில்வே வெவ்வேறு டிஜிட்டல் சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இதனால் பயணிகள் ஒவ்வொரு தேவைக்குமான பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பயன்பாடு கூகிள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். தற்போது, ​​அதன் பீட்டா பதிப்பு சோதனை கட்டத்தில் உள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏற்கனவே உள்ள பயனர்கள் Rail Connect மற்றும் UTSonMobile செயலியின் உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம். ஆன்லைனில் முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் (UTS), ரெயில் டிக்கெட் புக்கிங், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, சீசன் பாஸ்களை நிர்வகிப்பது, PNR ஸ்டேட்டஸ் செக்கிங், இருக்கை கிடைப்பதை சரிபார்ப்பது, ஐஆர்சிடிசி கேட்டரிங் உணவு ஆர்டர், ரெயில்வே அட்டவணை விசாரணைகள், ரெயில் ரன்னிங் ஸ்டேட்டஸ், ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு, பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் சேவை உள்ளிட்ட பல சேவைகளை ஒரே இடத்தில இச்செயலி வழங்கவுள்ளது.தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதிசெய்தல் , மொபைல் OTP உள்நுழைவைப் பயன்படுத்தி m-PIN, பயோமெட்ரிக் மற்றும் பல காரணி சரிபார்ப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துகிறது. இதனால், இதற்கென ஏற்கனேவே தனித்தனியே இருக்கும் செயலிகளை போனில் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறைவதால் போனில் இடம் மிச்சமாகும். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த சேவைகள் மேலும் ஸ்வாரெயில் செயலியில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version