சினிமா

டீடோட்லராக மாறிய அஜித்.. காரணம் என்ன தெரியுமா

Published

on

டீடோட்லராக மாறிய அஜித்.. காரணம் என்ன தெரியுமா

சினிமா மட்டுமின்றி கார் ரேசிங்கிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி படம் வெளிவந்து சூப்பர்ஹிட்டானது.இதை தொடர்ந்து இவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கும் என தாவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் முழுமையாக ரேசிங்கில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அஜித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எப்படி உடல் எடையை குறைந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.அவர் கூறியதாவது.”ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்”.”ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன். என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது போது செய்து கொண்டிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version