பொழுதுபோக்கு

தந்தை ராணுவ வீரர்: இந்த சிறுமி இப்போ சீனியர் நடிகை: யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

Published

on

தந்தை ராணுவ வீரர்: இந்த சிறுமி இப்போ சீனியர் நடிகை: யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகினறனர். இதில் தங்களுக்கு பிடித்தமாக தான் ரசிக்கும் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பற்றிய தகவல்களை நாள்தோறும் தேடி வரும் ரசிகர்களுக்கு, அவ்வப்போது அவர்களின் அஸ்தான நாயகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவரது அப்பா ராணுவ வீரருடன் அவர் அமர்ந்திருக்கிறார். அந்த நடிகை தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற தீரன் படத்தின் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான்.2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து கிரிட்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், யுவன் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழில் 2-வது படமாக அருண்விஜயுடன் இவர் நடித்த தடையற தாக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது பலருக்கு தெரியவில்லை.அதன்பிறகு என்னமோ ஏதொ என்ற தமிழ் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் தீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். இந்த படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.  தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரா இவர் என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version