சினிமா
தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி சேரவுள்ள சூப்பர் ஸ்டார்..!
தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி சேரவுள்ள சூப்பர் ஸ்டார்..!
இளம் நடிகருக்கு போட்டியாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் பட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி ” படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நெல்சன் இயக்கும் “ஜெயிலர் 2 ” படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து ரஜினியுடன் கூட்டணி வைப்பதற்காக பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் கூட்டணி போட உள்ளார். தெலுங்கு பட ஹிட் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கூலி படம் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதுடன் .ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.