விளையாட்டு
தோனிக்கு இருப்பது தான் உண்மையான ரசிகர்கள்; மற்றவர்கள் காசு கொடுத்து… ஹர்பஜன் சிங் சர்ச்சை கருத்து
தோனிக்கு இருப்பது தான் உண்மையான ரசிகர்கள்; மற்றவர்கள் காசு கொடுத்து… ஹர்பஜன் சிங் சர்ச்சை கருத்து
இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொண்டாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 43 வயதில் இறங்கி அசத்தி வரும் கேப்டன் எம்.எஸ்.தோனி தொடர்ந்து சென்னை அணிக்கா விளையாட வேண்டும் என்று முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதாகவும், அவர்கள் தான் உண்மையான ரசிகர்கள் என்றும் சமீபத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.”தோனி எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அவ்வளவு காலம் அவர் விளையாட வேண்டும். அது என்னுடைய அணியாக இருந்திருந்தால், நான் வேறு முடிவு எடுத்திருப்பேன். ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். அவருக்கு உண்மையான ரசிகர் பட்டாளம் உள்ளது. மற்றவர்கள் அனைவரும் சமூக ஊடகத்தில் உள்ளவர்கள், அவர்கள் பணம் கொடுத்து உருவாக்கப்படும் ரசிகர்கள். அவர்களை விட்டு விடுங்கள், அதைப் பற்றி பேசத் தொடங்கினால், விவாதம் வேறு திசையில் செல்லும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.ஹர்பஜனின் இந்த கருத்துக்கு அவரது சக பேச்சாளரான ஆகாஷ் சோப்ரா, “இவ்வளவு உண்மையை சொல்லியிருக்கக் கூடாது” என்று சிரித்தார். ஐபிஎல் 2025ல் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டு அவருக்கு கடைசி ஆண்டாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் வீரர்கள் அணியில் நிலைபெற வேண்டும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5-வது முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியின் நிலைக்கு சென்னை அணி திரும்ப வேண்டும்.இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் இது அவர்களுக்கு மிக மோசமான சீசனாக இருந்தது. இந்த சீசன் அணிக்கு ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.