இலங்கை

மட்டக்களப்பில் மினி சூறாவளி ; வீடுகள் சேதம்

Published

on

மட்டக்களப்பில் மினி சூறாவளி ; வீடுகள் சேதம்

  மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன.

Advertisement

ஒரு வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்த நிலையில் அங்கிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இதன்போது வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று அப்பகுதியில் மேலும் இரண்டு வீடுகள் மீது மரம் முறிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு அதன் ஊடாக பிரதேச செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, நாட்டின் பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version