பொழுதுபோக்கு

மதுரை மண்சோறு சம்பவம்; மாமன் படத்திற்கு வரவேற்பு: நடிகர் சூரி ஓபன் டாக்!

Published

on

மதுரை மண்சோறு சம்பவம்; மாமன் படத்திற்கு வரவேற்பு: நடிகர் சூரி ஓபன் டாக்!

மதுரையில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட சம்பவம் போல் இனி இதுபோன்று நடக்காது என நினைப்பதாகவும் என்ன நினைத்து படம் எடுத்தமோ அதற்கான வரவேற்பு மாமன் படத்திற்க்கு கிடைத்துள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.கோவை அவினாசி சாலையில் உள்ள பிராடுவே திரையரங்கில் ரசிகர்களோடு மாமன் திரைபடத்தை பார்த்த நடிகர் சூரி பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், மாமன் படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், படத்தை அனைவரும் கொண்டாடுவது மட்டுமல்லாமல், என்ன நினைத்து படம் எடுத்தமோ அதற்கான வரவேற்பு கிடைத்துள்ளதுள்ளது. அனைவருக்கும் படம் எமோஷனாலாக கணெக்ட் ஆகியுள்ளது. பலரும் படம் பார்த்து விட்டு என் கையை பிடித்து அழுதார்கள். மேலும் இந்த படத்தை பார்த்து அனைத்து உறவுகளும் அவ்வபோது சந்தித்து கொள்ள வேண்டும். செல்போனால் பலரும் தனிமையோடு வாழ்ந்து உறவுகளுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கின்றனர்.கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன்.மதுரையில் மண் சோறு சாப்பிட்ட சம்பவம் போல் இனி இதுபோன்று நடக்காது என நினைக்கிறேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த உழைப்புகான அங்கீராம் கிடைத்து வருகிறது., என்னதான் ஓடிடியில் படங்கள் வெளியானலும், திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சூரி கூறியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த  வயதான தம்பதி, படம் நன்றாக இருந்தாக கூறி அவருக்கு மலர் தூவி வாழ்த்தினர். அவர்களின்  காலில் விழுந்து ஆசி நடிகர் சூரி ஆசி பெற்றார். இச்சம்பவம் திரையற்கு முன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version