இலங்கை
மது போதையில் காரை பறக்கவிட்ட பொலிஸ் அதிகாரி ; தமிழர் பகுதியில் சம்பவம்
மது போதையில் காரை பறக்கவிட்ட பொலிஸ் அதிகாரி ; தமிழர் பகுதியில் சம்பவம்
அம்பாறை – காவன்திஸ்ஸ வித்தியாலயத்திற்கு அருகில் மது போதையில் காரொன்றை செலுத்திய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைது செய்தனர்.
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைதியாகியுள்ளார்.
சம்பந்தப்பட்ட காரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது, பிரதேச போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தொலைபேசியில் பதிவான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியின் சேவையை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.