இலங்கை
மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகளை பொதுமக்கள் மீது சுமத்த கூடாது’!
மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகளை பொதுமக்கள் மீது சுமத்த கூடாது’!
மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகள் பொதுமக்களுக்கு மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் 18 பில்லியன் ரூபாய் இழப்பு அரசாங்கத்தின் நிர்வாக பலவீனங்களை தெளிவாகக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, அரசாங்கம் இந்த இழப்பை மக்கள் மீது சுமத்தி, மின்சாரக் கட்டணத்தை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தை மேலும் 13 சதவீதத்தால் குறைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இவ்வாறு மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இந்த முடிவுக்கு எதிராக மக்களுடன் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி தயங்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை