சினிமா
விஜய் அழைத்தாலும் நான் செல்லமாட்டேன்…! – நேர்காணலில் திடுக்கிடும் பதில் கொடுத்த சூரி..!
விஜய் அழைத்தாலும் நான் செல்லமாட்டேன்…! – நேர்காணலில் திடுக்கிடும் பதில் கொடுத்த சூரி..!
தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் தொடர்புகள் எப்போதும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், பேசுபொருளையும் உருவாக்குகின்றன. அந்த வகையில், தற்போது நடிகர் சூரி அளித்த ஒரு சிறிய பதில் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ஒரு நேர்காணலில், தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமாக பேசப்படும் தலைவரான த.வெ.க தலைவர் விஜய் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சூரி அளித்த பதில் தான் தற்பொழுது வைரலாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நடிகர் சூரி பங்கேற்றபோது அவரது நடிப்புத்திறமை குறித்தும் சமீபத்திய அரசியல் சூழ்நிலையை பற்றியும் சில கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது தமிழக அரசியல் களத்தில் “த.வெ.க” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.இந்த அரசியல் பின்னணியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவர், “த.வெ.க தலைவர் விஜய் உங்கள் நண்பர். அவர் உங்களை விரைவில் பிரச்சாரத்திற்கு அழைத்தால், நீங்கள் அவருக்காக பிரச்சாரம் செய்ய தயாரா?” என்று நேரடியாகக் கேட்டிருந்தார்.இந்த கேள்விக்கு சூரி, “விஜய் அண்ணன் அரசியலில் சரியாக போய்க் கொண்டிருக்கிறார். நல்ல விஷயங்களைச் செய்கிறார். ஆனால் எனக்கு இப்போ நிறைய பட வேலைகள் இருக்கின்றன.”எனப் பதிலடி கொடுத்துள்ளார்.சூரி தற்போது தனது புதிய ஹீரோயிசம் பயணத்தில் முன்னேறி வருகின்றார். சமீபகாலமாக பல படங்களில் நடித்து வரும் அவர், நடிப்புக்காக தன்னை முழுமையாக ஒதுக்கிக்கொண்டு இருக்கின்றார். அத்தகைய நடிகரின் இந்தப் பதில் மூலம், தனது சினிமா பயணத்தை அரசியலால் பாதிப்பு ஏற்படுத்தாமல் வைத்திருக்க விரும்புகிறாரென்பதும் தெளிவாகிறது.